

ரஷ்யாவுக்கு ஆதரவாக உக்ரைனுக்குள் நுழைந்து பெலாரஸ் படைகள் தாக்குவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் 6-வது நாளாக தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்ய படைகள் ஆக்ரோஷமான தாக்குதலுடன் வேகமாக முன்னேறி வருகின்றன.
ஏற்கெனவே தலைநகர் கீவ் நகருக்குள் நுழைந்துள்ள ரஷ்ய ராணுவத்தினர் அரசு கட்டடங்கள் மீது தாக்குதல் நடத்தி வரும் சூழலில், இரண்டாவது பெரிய நகரான கார்கிவ்வின் மீதும் ரஷ்யப் போர் விமானங்கள் சக்தி வாய்ந்த குண்டுகளை வீசி வருகின்றனர்.
இந்நிலையில், ரஷ்யாவுக்கு ஆதரவாக பெலாரஸ் நாட்டின் படைகள் உக்ரைனின் வடக்குப் பகுதி வழியாக நுழைந்து தாக்குதல் நடத்துவதாக உக்ரைன் நாடாளுமன்ற அதிகாரி ஒருவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
