• Mon. Jan 20th, 2025

உக்ரைன் போரில் இந்திய மாணவர் பரிதாபமாக உயிரிழப்பு…

Byகாயத்ரி

Mar 1, 2022

உக்ரைன் ரஷ்யாவிற்கு இடையேயான போர் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் இந்தியர்களை உக்ரைனிலிருந்து அழைத்து வர தொடர்ந்து விமானங்கள் அனுப்பப்பட்டுள்ளது. தற்போது உக்ரைனில் நடந்த தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உக்ரைனின் கார்கிவ் நகரம் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் நடத்தி வரும் நிலையில், அங்கிருந்து லிவிங் நகருக்கு ரயிலில் செல்ல முயன்றபோது நடந்த தாக்குதலில் கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் உயிரிழந்தார். இவர், அங்கு எம்பிபிஎஸ் 4ம் ஆண்டு படித்து வந்தார். எப்படியாவது உக்ரைனின் மேற்கு எல்லைக்குச் சென்று, அங்கிருந்து வெளியேறலாம் என்ற நிலையில் இந்த சோக நிகழ்வு நடந்துள்ளது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.