நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே நடிப்பில், இன்று காலை வெளியான பீஸ்ட் திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.
இந்நிலையில் சமூகவலைதளங்களில் பீஸ்ட் திரைப்படம் பற்றி இருவேறு கருத்துகள் வெளியாக ஆரம்பித்துள்ளன. ஒரு தரப்பினார் “ஆஹா ஓஹோ’ என புகழ்ந்து தள்ள மற்றொரு தரப்பினரோ ‘படம் சுத்தமாக சரியில்லை” என்று கூறி வருகின்றனர். ஒரு காட்சிதான் முடிந்திருக்கிறது என்பதால் அடுத்தடுத்த காட்சிகளில் இன்னும் துல்லியமான விமர்சனங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.