• Sat. Oct 12th, 2024

ஹிட் படங்களின் இரண்டாம் பாகங்கள் எப்போ? -செல்வராகவன் பதில்!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை படமாக்குவதில் சிறந்த இயக்குனர்களில் ஒருவர் செல்வராகவன். இவரது இயக்கத்தில் வெளியான ஆயிரத்தில் ஒருவன், காதல்கொண்டேன், புதுப்பேட்டை, 7ஜி ரெம்போ காலனி ஆகிய திரைப்படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட்! இதில் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் பலத்த எதிர்பார்ப்பில் உள்ளனர். இதில் ஆயிரத்தில் ஒருவன் 2024-ஆம் ஆண்டு தொடங்கும் அதில் தனுஷ் நடிப்பார் என அறிவித்திருந்தார்.

இதனை தொடர்ந்து சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டியாளத்த செல்வராகவனிடம் ஆயிரத்தில் ஒருவன் 2 மற்றும் புதுப்பேட்டை 2 படம் குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் அளித்த செல்வராகவன் ” புதுப்பேட்டை 2 எடுக்க தனுஷ் வேண்டும்.. ஆயிரத்தில் ஒருவன் 2 எடுக்க கார்த்தி வேணும்.. ஒரு காலகட்டம் இருக்கவேண்டும்.. இரண்டும் வேற வேற மாதிரி கதை. எடுத்தால் கண்டிப்பாக பெரிதாக எடுக்க வேண்டும். தனுஷ் சொன்ன மாதிரி எடுத்தால் மிகவும் பெரிதாக எடுக்கவேண்டும்..இல்லனா பேசாம இருக்கவேண்டும்.. அதறகான கால சந்தர்ப்பம் அமைந்தவுடன் பண்ணலாம்” என கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *