• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

கும்பக்கரை அருவியில் குளிக்க தடை

ByA.Tamilselvan

Oct 12, 2022

தேனி மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால் கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளாதல் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
கன மழை காரணமாக பெரியகுளம் அருகில் உள்ள கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த அருவிக்கு கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக ஏராளமான சுற்றுலா பயணிகள் குடும்பத்துடனும், நண்பர்களுடனும் வந்து குளித்து மகிழ்ந்து சென்றனர். தற்போது தேனி மாவட்டத்துக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாலும், அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுவதாலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்த தடை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.