புதுக்கோட்டை கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலைக் கல்லூரி (NSS) யூனிட், புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்கம், புதுக்கோட்டை மெட்ரோ ரோட்டரி சங்கம் மற்றும் புதுகை வெற்றி ரோட்டரி சங்கம் இணைந்து உடல் உறுப்பு தான விழிப்புணர்வு கருத்தரங்கம் அரசு மகளிர் கலை கல்லூரி வளாகத்தில் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க தலைவர் S.அப்துல் ரகுமான் என்ற சேட் தலைமையில் நடைபெற்றது முன்னதாக வருகை தந்த அனைவரையும் புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க பொருளாளர் கண.மோகன்ராஜா வரவேற்றார்.

ரோட்டரி பிரார்த்தனை புதுகை வெற்றி ரோட்டரி சங்க தலைவர் A.சோமசுந்தரம் வாசித்தார் விழாவில் கலைஞர் கருணாநிதி அரசு மகளிர் கலை கல்லூரி முதல்வர் திருமதி K.நிர்மலா, புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க உறுப்பினர் இருதய நோய் சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் M.சுதர்சனன், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தமிழ்நாடு உறுப்பு மற்றும் ஒருங்கிணைப்பாளர் லோ. சண்முகப்பிரியா வாழ்த்துரை வழங்கினார்கள்.

புதுக்கோட்டை காவல் துணை கண்காணிப்பாளர் திருமதி R.பிருந்தா, அரசு மருத்துவக் கல்லூரி SPM AP K.சரவணன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உடல் உறுப்பு தான விழிப்புணர்வை பற்றி சிறப்புரையாற்றி மாணவிகளுக்கு விழிப்புணர்வு கையேடு வழங்கி தந்தார்கள். விழாவில் புதுக்கோட்டை பேலஸ் சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் V.தினேஷ், மேனாள் தலைவர் N.வேலுச்சாமி புதுக்கோட்டை மெட்ரோ ரோட்டரி சங்க தலைவர் P.ஹரிஹரசுதன், புதுகை வெற்றி ரோட்டரி சங்க செயலாளர் (பொ) SM. அண்ணாமலை, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுமார் 1500 பேர் கலந்து கொண்டனர்.
உடனடி மேனாள் தலைவர் குட்லக் AR.முஹம்மது அப்துல்லா மேனாள் செயலாளர் R.சங்கர், NSS ஒருங்கிணைப்பாளர்கள் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர். விழாவினை மாஸ்டர் சேது கார்த்திகேயன் தொகுத்து வழங்கினார். நிறைவாக புதுக்கோட்டை சிட்டி ரோட்டரி சங்க செயலாளர் K.மணிகண்டன் நன்றி கூற விழா இனிதே நிறைவு பெற்றது.





