• Sat. Apr 20th, 2024

கிவி பழங்களை இறக்குமதி செய்ய தடை

Byமதி

Dec 15, 2021

ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வந்த கிவி பழங்களில் பூச்சிகள் அதிகம் என எச்சரித்தும் இது தொடர்கதையாக இருந்ததால் இறக்குமதி நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த அக்டோபர் முதல் ஈரான் நாட்டிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதியான கிவி பழங்களில் ‘Aspidiotus netil’ மற்றும் ‘Pseudococcu Calceolariae’ என்ற பூச்சிகள் இருந்ததாக இந்தியா தெரிவித்துள்ளது. கடந்த 2019-ல் இதேபோல ஈரான் நாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கிவி பழங்களில் பூச்சிகள் இருந்ததாகவும் ஈரான் தரப்புக்கு இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் ஈரான் நாட்டின், கிவி பழங்களுக்கு கடந்த 8-ஆம் தேதி முதல் கொடுத்த பிஸியோ சானிட்டரி சான்றிதழில் எங்கள் தரப்புக்கு உடன்பாடில்லை என சொல்லி ஈரான் வேளாண் அமைச்சகத்திற்கு கடிதம் மூலம் இந்தியா இதனை தெரிவித்துள்ளதாக சொல்லப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து 4000 டன் கிவி பழங்களை இந்தியா இறக்குமதி செய்வது மட்டுமல்லாது கிவி பழங்களின் உள்நாட்டு உற்பத்தி 13000 டன்னாக இருக்கிறது எனவும் அரசு தரவுகள் சொல்லுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *