தஞ்சை அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 சிறுவர்கள் 62 ஆயிரம் ரூபாய்க்கு, செம்மறி ஆடு மேய்க்கும் தொழிலுக்கு கொத்தடிமைகளாக விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை வல்லம் புதூர் பகுதியை சேர்ந்தவர் சுந்தர்ராஜன், பாப்பாத்தி தம்பதி. இவர்களுக்கு நான்கு மகன்கள் ஒரு மகள் என ஐந்து பிள்ளைகள். மகளுக்கு திருமணம் ஆன நிலையில் நான்கு மகன்களுடன் சுந்தர்ராஜன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கோவிந்தராஜ் என்பவர், அவரது அண்ணன் மணிராசு, மைத்துனர் செல்வம் ஆகியோருடன் இணைந்து உரத்திற்காக செம்மறி ஆடு மேய்த்து வந்துள்ளார்.
கரிப்புகை மூட்டும் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் சுந்தர்ராஜன் தனது நான்கு மகன்களையும் கோவிந்தராஜிடம் 62 ஆயிரம் ரூபாய்க்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஆடு மேய்ப்பதற்காக கொத்தடிமைகளாக விட்டுள்ளார். இதை அறிந்த ஒருவர், 1098 சைல்டு லைன் அமைப்பிற்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, செல்களின் அமைப்பை மற்றும் தாலுகா அலுவலர் காவல்துறையினர் உடனடியாக சென்று நான்கு சிறுவர்களையும் மீட்டுள்ளனர்.