• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

ஸ்மார்ட்போன்களின் விலையை குறைக்க நடவடிக்கை – மத்திய அரசு

Byமதி

Dec 15, 2021

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய தொலைத்தொடர்பு அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘உலக அளவில் ஸ்மார்ட்போன் உற்பத்தியில் இந்தியா 2-வது இடத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளில் ஏற்பட்ட மாற்றத்தால் ஸ்மார்ட்போனின் விலை ரூ.10 ஆயிரத்துக்கு கீழே வந்துள்ளது. ஸ்மார்ட்போன்களின் விலையை மேலும் குறைப்பதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி, வினியோக செலவுகளை குறைத்தல் மற்றும் இந்தியாவின் வடிவமைப்பு திறன்களை அதிகரித்தல் போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது’ என கூறினார்.