அதிமுக தலைமை அலுவலகம் செல்ல தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் கலவரம் ஏற்பட்டுவிடாமல் இருக்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அதிமுக தலைமை அலுவலகத்திற்கு கட்சி தொண்டர்கள் செல்ல ஐகோர்ட் விதித்த தடை இன்றுடன் நிறைவு பெறுகிறது. ஜூலை 11ம் தேதி இபிஎஸ் – ஓபிஎஸ் தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அலுவலகம் செல்ல ஓருமாதம் உயர்நீதிமன்றம் தடை விதித்தது. இந்த தடை இன்றுடன் நிறைவு பெறுவதால் இரு தரப்பும் பிற்பகலில் தலைமை அலுவலகம் செல்வார்கள் என கூறப்படுகிறது. இதனால் மீண்டும் கலவரம் ஏற்பட்டு விடக்கூடாது என போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.