
காவிரி உபரிநீர் திட்டத்தை வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார்.
காவிரி உபரி நீர் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் இன்று முதல் 3 நாட்கள் நடைபயணம் மேற்கொள்கிறார். இந்த நடைபயணத்தில் அரசியல் நிலைகளை கடந்து அனைத்து தரப்பு மக்களும் பங்கேற்க வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மக்கள் நலனை கருத்தில் கொண்டு இத்திட்டம் செயல்படுத்துவது பற்றி தமிழக அரசு உடனே அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
