

புதுக்கோட்டைசந்தைப்பேட்டை மதன் ஏற்பாட்டில் சூரி ரசிகர் மன்ற தலைவர் செயலாளர் பொருளாளர்மற்றும் ரசிகர்கள் ஏராளமான மேளதாளங்களுடன் வெடி வெடித்து திரையரங்கம் முன்பு வைக்கப்பட்டு இருந்த டிஜிட்டல் பேனரில் பாலாபிஷேகம் செய்து படம் வெற்றியடைய வேண்டுமென மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள்.

காமெடி நடிகராக திரையுலகில் சிறந்து விளங்கி வந்த சூரி கடந்த ஆண்டு முதல் ஹீரோவாகநடிக்க ஆரம்பித்தார். கடந்த படங்கள் வெளியாகி பிரபலமாகி வெற்றி அடைந்தது அதனைத் தொடர்ந்து இந்த திரைப்படமும் வெற்றி பெற வேண்டும் என கொண்டாடினார்கள்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாட்டினை மாவட்ட நிர்வாகி சந்தப்பேட்டை மதன் செய்திருந்தார்.

