

புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு தேர்வில் மேட்டுப்பட்டி காமராஜபுரம் ஜெயராணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவன் சாய் கார்த்தி 498 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

முன்னதாக பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவன் சாய் கார்த்திக்கு பள்ளி முதல்வர் வித்தியா பாராட்டி வாழ்த்து தெரிவித்து இனிப்பு ஊட்டினார் தொடர்ந்து பள்ளி தாளாளர் ராஜராஜன் பெற்றோர்கள் சாமிநாதன் முத்துலட்சுமி மற்றும் உடன்படித்த சக மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

