

கடந்த மே மாதம் 2025 ஆம் ஆண்டு 10 மற்றும் 11ஆம் தேதிகளில் மலேசியா நாட்டில் ஒக்கினோவா குஜரியோ பெடரேஷன் உலக அளவில் நடத்திய கராத்தே போட்டியில் புதுக்கோட்டை மாநகரில் சாணக்கியன் அகாடமியை இயக்கி வரும் இயக்குனர்கள் சென்சாய் ராஜராஜேஸ்வரி சென்சாய் ராஜேந்திர பிரசாத் மற்றும் செயலாளர் வெங்கடேசன் அவர்களின் மாணவ மாணவிகள் கத்தார் மற்றும் குமித்தே பிரிவில் கலந்துகொண்டு தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வென்றுள்ளார்கள்.

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளின் பெயர்கள் விபரம் எம் சுகந்தி தங்கம் மற்றும் வெங்கலம் ஆர்.எஸ் நாகவேந்தன் தங்கம் மற்றும் வெள்ளி பி. தனசேகரன் தங்கம் மற்றும் வெள்ளி எஸ் ஜெகதீஷ் தங்கம் மற்றும் வெள்ளி ஆர் ஹரிஷ் தங்கம் மற்றும் வெள்ளி எஸ் ரித்திகா தங்கம் மற்றும் வெண்கலம் எஸ் அனுஷ்கா தங்கம் மற்றும் வெண்கலம் எஸ் அஸ்வின் வெண்கலம் எஸ் ரேஷ்மி வெள்ளி பி தவனேஸ் வெண்கலம்.

