அன்றாடம் பல விலங்குகளின் அட்டகாசங்கள் இணையத்தில் களைகட்டி வருவதை நாம் தினமும் பார்த்து மகிழ்ந்து வருகிறோம். அந்த வகையில் தற்போது யானைக்குட்டி ஒன்று ஸ்டைலாக தண்ணீர் அருந்தும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் பரவி பலரது மனங்களையும் கொள்ளை கொடுள்ளது. கோடைக்காலத்தில் மனிதர்களும், விலங்குகளும் தொண்டை வறண்டு தவிக்கும் நிலையில், தாகத்தை தணிக்க தண்ணீரை குடிக்கும் அந்த யானை தனி ஸ்டைலுடன் குடிக்கிறது.
தற்போதுள்ள வைரல் வீடியோவானது, சமூக வலைத்தளங்களில் ஒன்றான ட்விட்டரில், டாக்டர்.சாம்ராத் கவுடா ஐஎஃப்எஸ் என்பவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அந்த வீடியோவில் யானைகுட்டி ஒன்று கருப்பு நிற பக்கெட் அருகேயும், பெரிய யானை ஒன்று சிறிது தூரத்திலும் நிற்கிறது. அந்த பக்கெட்டில் டியூப் மூலம் தண்ணீர் நிரப்பப்பட்டு இருக்கிறது, அதிலுள்ள தண்ணீரை தாகத்தில் இருக்கும் யானைக்குட்டி ஒன்று வந்து குடிக்கிறது, அது மற்ற யானைகளை போல் நீரை அருந்தாமல் தும்பிக்கையை ஒருவிதமாக நீட்டி மடக்கி ஸ்டைலாக நீரை வருந்துகிறது.
இந்த காட்சி இணையத்தில் வைரலாகிவிட, இது எட்டாயிரத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ{களை குவித்துள்ளது. அதோடு பல்லாயிரக்கணக்கான இணையவாசிகள் இந்த வீடியோவை பார்த்து ரசித்துள்ளனர். இந்த வீடியோவிற்கு ‘ட்ரிங்கிங் வாட்டர் வித் ஸ்டைல்’ என்ற கேப்ஷனும் பதிவிடப்பட்டுள்ளது, யானை தண்ணீரை அருந்தும் காட்சியை பார்த்து பலரும் ஹார்ட் எமோஜிகளை பதிவிட்டு வருகின்றனர்.