தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தற்போது நிறைவடைந்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2018 ஆம் ஆண்டு மே 22 ஆம் தேதியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் போலீசாரின் துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர்.இது தொடர்பாக,ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில்,தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக அமைக்கப்பட்ட ஒரு நபர் ஆணையத்தின் விசாரணை தற்போது நிறைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதே சமயம்,3 மாதத்தில் விசாரணை அறிக்கை தமிழக அரசிடம் சமர்பிக்கப்படும் என ஒரு நபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள் வடிவேல் சேகரன் தெரிவித்துள்ளார்.
2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9 ஆம் தேதி தொடங்கிய ஆணையத்தின் விசாரணை 36 கட்டங்களாக இதுவரை நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.