• Fri. Mar 29th, 2024

ஆர். மணிகண்டன்

  • Home
  • டெல்லியில் கடுங்குளிர்- மக்கள் கடும் அவதி

டெல்லியில் கடுங்குளிர்- மக்கள் கடும் அவதி

டெல்லியில் இன்றைய காலை பொழுது கடுமையான குளிரில் விடிந்தது. நேற்று முன்தினம் 8 டிகிரியாக இருந்த வெப்பநிலை நேற்று அதிகாலை 4.4 டிகிரியாக சரிந்தது. சில இடங்களில் 4 டிகிரிக்கும் கீழே இருந்தது. ஒரே நாளில் இப்படி தாறுமாறாக குறைந்த வெப்பநிலை,…

தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன்
நான் மட்டுமே: அண்ணாமலை ஆவேசம்

தி.மு.க.வை ஆக்ரோஷமாக எதிர்ப்பவன் நான் மட்டும்தான் என்று அண்ணாமலை தெரிவித்தார்.சென்னை தியாகராயநகரில் உள்ள கமலாலயத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை முன்னிலையில், தமிழக தலித் கட்சி தலைவர் தலித் குடிமகன் மற்றும் பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் நேற்று பா.ஜ.க.வில் சேர்ந்தனர். அதனைத்தொடர்ந்து…

பாகிஸ்தானில் பிளாஸ்டிக் பைகளில்
கியாஸ் நிரப்பி செல்லும் மக்கள்

பாகிஸ்தானில் சமையல் கியாஸ் சிலிண்டர்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாடு காரணமாக மக்கள் பிளாஸ்டிக் பைகளில் கியாஸ் நிரப்பி செல்லும் அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.பாகிஸ்தான் கடந்த சில ஆண்டுகளாக கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவித்து வருகிறது. சரிந்து வரும் பொருளாதாரத்தின் விளைவாக, பாகிஸ்தான் அரசாங்கம் அதன்…

நீட் தேர்வு விவகாரம்: முதல்வர் பகிரங்க
மன்னிப்பு கேட்க எடப்பாடி வலியுறுத்தல்

நீட் தேர்வு விவகாரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினும், உதயநிதி ஸ்டாலின் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- எத்தனை காலந்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே! இன்னும் எத்தனை…

அதிமுக பொதுக்குழு வழக்கு
இன்று மீண்டும் விசாரணை

அதிமுக பொதுக்குழுவுக்கு எதிரான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது.கடந்த ஆண்டு (2022) ஜூலை 11-ந் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக்குழு செல்லும் என்ற ஐகோர்ட் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் ஓ.பி.எஸ் மற்றும் அவரது ஆதரவாளர் வைரமுத்து…

சஞ்சு சாம்சன் காயம்
காரணமாக விலகல்

இலங்கைக்கு எதிரான தொடரில் இருந்து காயம் காரணமாக சஞ்சு சாம்சன் விலகியுள்ளார்.இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இலங்கைக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்தியா 2 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் பீல்டிங்…

அமெரிக்க அதிபர் பைடனுடன்
ஜப்பான் பிரதமர் சந்திப்பு

அமெரிக்க அதிபர் பைடனை வெள்ளை மாளிகையில் வைத்து ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா வரும் 13-ம் தேதி சந்தித்து பேசுகிறார்.ஆசிய நாடுகளில் ஒன்றான ஜப்பான் நாடு, தென்கொரியா, அமெரிக்காவுடன் நட்பு ரீதியிலான தொடர்பு கொண்டுள்ளது. எனினும், மறுபுறம் அமெரிக்கா மற்றும் அதன்…

திருமகன் ஈ.வெ.ரா எம்.எல்.ஏ மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்

ஈரோடு கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ ஈ.வெ.ரா திருமகன் மறைவிற்கு அன்புமணி ராமதாஸ் இரங்கல்தெரிவித்துள்ளார்.ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. திருமகன் ஈ.வெ.ரா (வயது 46) காலமானார். இவர் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் மகன் ஆவார். உடல் நலக்குறைவால் மருத்துவமனையில்…

2வது முறையாக அமெரிக்க
நீதிபதியாக மலையாளப் பெண்..!

தொடர்ந்து 2-வது முறையாக மலையாளப் பெண் ஒருவர் அமெரிக்காவில் நீதிபதி பதவி ஏற்றுள்ளார். அமெரிக்காவில் சமீப காலமாக இந்தியர்கள் நீதிபதி பதவிகளில் அமர்ந்து அசத்தி வருகிறார்கள். அவர்களில் ஒருவர், ஜூலி ஏ. மேத்யூ. இவர் கேரள மாநிலம் திருவல்லாவை சேர்ந்த மலையாளப்பெண்…

சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். வழக்கமான மருத்துவ பரிசோனைக்காக சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.