அமெரிக்காவில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு
அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடியை கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் வரவேற்றனர். அரசுமுறை பயணமாக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ், அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கடந்த 10-ம் தேதி பிரான்ஸ் சென்ற அவர் தலைநகர் பாரிசில் நடைபெற்ற சர்வதேச…
புதிய வருமானவரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் !
புதிய வருமான வரி மசோதா நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்.1-ம் தேதி தாக்கல் செய்தார். இதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை புதிய வருமான வரி மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்…
பாலதண்டாயுத சுவாமி கோயில் திருப்பணியில் பல லட்ச ரூபாய் மோசடி- இந்து மக்கள் கட்சி பரபரப்பு புகார்
மதுரை நேதாஜி சாலை தண்டாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக திருப்பணிக்கு வழங்கப்பட்ட நன்கொடையில் மோசடி செய்த கோயில் ஊழியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறநிலையத்துறை இணைய ஆணையரிடம் இந்து மக்கள் கட்சி புகார் மனு அளித்துள்ளது. பாலதண்டாயுத சுவாமி…
அரசியல் ஆணையத்திற்கே அந்த அதிகாரம் இல்லை- முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் ஆவேசம்
அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு அதிகாரமே இல்லை என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதித்த தடை நீக்கப்படுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன்,…
தமிழ்நாட்டில் 10 நாட்களில் 38 ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: ராமதாஸ் கண்டனம்
கடந்த ஜனவரி 31-ம் தேதி 31 அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள்…
மகா கும்பமேளாவில் 46.25 கோடி பக்தர்கள் புனித நீராடல்
பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவையொட்டி திரிவேணி சங்கமத்தில் இதுவரை 46.25 கோடி பக்கதர்கள் புனித நீராடி உள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை, யமுனை, சரஸ்வதி ஆகிய மூன்று நதிகளும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளா…
அதிர்ச்சியில் அதிமுக… ஈபிஎஸ் மனுவை தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை கோரிய மனுவை தள்ளுபடி செய்து, விசாரணைக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க சென்னை உயர் நீதிமன்றம், உத்தரவிட்டுள்ளது. அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்ந்தெடுத்தது உள்ளிட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை…
தமிழ்நாட்டில் பிப்.24 முதல் 1,000 இடங்களில் முதல்வர் மருந்தகங்கள் திறப்பு
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் பிப்ரவரி 24-ம் தேதி முதல் முதல்வர் மருந்தகங்கள் திறக்கப்பட உள்ளன. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். கடந்த ஆண்டு சுதந்திர தினவிழா உரையின் போது, குறைந்த விலையில் (ஜெனரிக்) மருந்து மாத்திரைகளையும் பிற மருந்துகளையும்…
தங்கம் விலை திடீர் சரிவு – இன்றைய விலை இதுதான்!
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் 7 ஆயிரத்து 940 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கேற்ப தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன்…
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடம் – இந்தியாவுக்கு எந்த இடம் தெரியுமா?
ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் டென்மார்க் முதலிடம் பிடித்துள்ளது. இந்தியா 96-வது இடத்தில் உள்ளது. ஆண்டுதோறும் டிரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் என்ற அமைப்பு உலக நாடுகளின் ஊழல் புலனாய்வு அறிக்கையை வெளியிடுகிறது. இதில் 2024-ம் ஆண்டிற்கான ஊழல் புலனாய்வு குறியீடு (சிபிஐ) தற்போது…




