மதுரை மாவட்டம் திருநகர் நெல்லையப்பர்புரத்தில் அமைந்துள்ள அருள்மிகு வெயில் உகந்த அம்மன் திருக்கோயிலின் 29-ஆம் ஆண்டு புரட்டாசி பொங்கல் திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்ச்சியாக மாபெரும் அன்னதானம் நடைபெற்றது.

அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் முன்னாள் அறங்காவலர், முனைவர் ஆன்மீக செம்மல் உயர்திரு. வ. சண்முகசுந்தரம் அவர்கள் இந்த அன்னதானத்தை உபயம் செய்து துவக்கி வைத்தார். திருக்கோயில் நிர்வாகத் தலைவர் உயர்திரு. C. ஆனந்தன், S. ராஜபூரணச்சந்திரன், தவெக மாவட்டச் செயலாளர் உயர்திரு. S. மருதுபாண்டியன் மற்றும் கோயில் நிர்வாகிகள் இதில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில், உபயதாரர் முனைவர் வ. சண்முகசுந்தரம் அவர்களுக்கு திருக்கோயில் சார்பில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அன்னதானம் அருந்தி அம்மன் அருள் பெற்றனர்.




