மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கம்மாளப்பட்டியைச் சேர்ந்த தவமணி மனைவி சுஷ்மிதா என்ற பெண் சட்ட விரோதமாக வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.,

இந்த நிலையில் ரகசிய தகவலின் அடிப்படையில் பேரையூர் டிஎஸ்பி ஷீலா உத்தரவின் பேரில் காவல்துறை சார்பு ஆய்வாளர் சல்மான் தலைமையிலான போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

இதில் சட்ட விரோதமாக வீட்டில் அரசு மதுபான பாட்டில்களை பதுக்கி விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த 298 டாப் ஸ்டார் மதுபான பாட்டில்கள் மற்றும் ரூ 1500 ரொக்கப் பணத்தை பறிமுதல் செய்து சுஷ்மிதா என்ற பெண்ணை கைது செய்தனர்.,
இது குறித்து சேடபட்டி போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.,



