மதுரை மாவட்டம் சோழவந்தான் சட்ட மன்ற உறுப்பினர் எம்.வீ. கருப்பையா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி யிருப்பதாவது:-உலகப் பொதுமறை திருக்குறளில் என்பது இரண்டு அடிக ளில் ஏழு வார்த்தைகளில் உருவானது. சுருங்க கூறி பெறும் கருத்துக்களை தன்னுள் கொண்டது.

இன்று வரை மனித குலமேபோற்றி பாதுகாக் கப்பட்டு வரும் நூலாகஇருந்து வரு கிறது. அதுபோல் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் செயல்பாடுகள்உள்ளது என்றால் அது மிகையாகாது. 2024 ல் அரசியல் களத்தில் இறங்கி தமிழக வெற்றி கழகம்தொடங்கி விக்கிரவாண்டி மதுரை இரண்டு இடங்களில் மாநாடு நடத்தி பணம் கொடுத்து கூட்டம் கூட்டாமல் மாற்றத்தை விரும்பிய மக்களின் மனங்களில் இடம் பிடித்து தானாய் சேர்ந்து எழுச்சி கொண்ட இளைஞர்கள் கூட்டத்தால் நாட்டு மக்களை வியக்க வைத்து எதிரிகளை வியர்க்க வைத்து நான் தன்னந்தனி ஆளு நீஏளனமாக பாரு என்ற வெற்றி முழக்கத்தோடு சிங்கம் போல் எழுந்து தனித்து நின்று 2026சட்டமன்றத் தேர்தலில் களமிறங்கி தனி ஒருவனாய் தன்னிகரில்லா சாதனை படைத்து பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகம் காத்த ஜனநாயகன் தமிழக முதல்வர் ஜோசப் விஜய்ஏழை எளிய மக்களுக்கு நல்லாட்சி நடத்தி வருகிறார்.
தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் தொடங்க மதுரை வந்த போதும் சரி, பெரியார் அறிவுல கம் தொடங்க கோவை வந்த போதும் சரி புரட்சித் தளபதியை காண எழுச்சியோடு இளைஞர் கூட்டம் கொட்டும் மழையிலும் நனைந்தபடி அன்பையும் ஆதரவையும் வெளிப் படுத்தினார்கள். இதை ஏற்றுக் கொள்ள மனம் இல்லாத தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சனம் செய்கிறார் அவரது மகன் உதயநிதி யோ வாயால் வடை சுட வேண்டாம் என்கிறார். இவர்களை எல்லாம் விட ஒரு படி மேலேறி ஆலமரமாய் இருந்த அ.தி.மு.க.வை முருங்கை மரமாய் மாற்றிய முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியே கவர்ச்சி அரசியல் என்கிறார்.

2026சட்டமன்றத் தேர்தலிலும் தற்போது நடந்த இடைத் தேர்தலிலும் மக்களால் நிராகரிக்கப்பட்ட நீங்கள் இனியாவது ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவியுங்கள். மாற்றம் தந்த மக்களுக்கு முன்னேற்றம் தரும் திட்டங்களை செயல்படுத்தும் தமிழக முதல்வருக்கு ஆதரவாக தானாய் சேர்ந்த இளைஞர் கூட்டம் எழுச்சியை ஏற்படுத்திவருகிறது என்பது நாடறிந்த உண்மை இவ்வாறு அவர் கூறியுள்ளார்.



