

சோழவந்தான் அருகே தேனூர் அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோவிலில் ஆடிப்பெருக்கு வசந்த உற்சவ விழா திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ சுந்தரராஜ பெருமாள் திருக்கோயில் ஆடிப்பெருக்கு வசந்த உற்சவ விழா நடைபெற்றது. விழாவையொட்டி சுந்தர்ராஜப் பெருமாள் உற்சவருக்கும், மூலவருக்கும் பூதேவி, ஸ்ரீதேவி தாயாருக்கும் பால், தயிர் ,வெண்ணெய், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் திருமஞ்சனம் செய்யப்பட்டது. பின்னர் வைகை ஆற்றில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு வசந்த உற்சவ விழா நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் சுந்தராஜ பெருமாள் சர்வ அலங்காரத்துடன் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் அதிர் வேட்டுகள், மேளதாளம் முழங்க தேனூரின் முக்கிய வீதிகளில் வலம் வந்து திருக்கோவிலை அடைந்தார். வழிநெடுக பக்தர்கள் திருக்கண் வைத்து பெருமாளை வழிபட்டனர். தீப ஆராதனைகள் காட்டப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து அன்னதானம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுந்தர்ராஜ பெருமாளை வழிபட்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பரம்பரை தர்மகர்த்தா நெடுஞ்செழியன் மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

