

மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சி பகுதியில் சுற்றுச்சூழல் துறை மற்றும் பேரூராட்சி நிர்வாகம் இணைந்து சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்கும் விதமாக துணி பைகளை பயன்படுத்திட மஞ்சள் பைகளை அருள்மிகு ஸ்ரீ ஜேனகை மாரியம்மன் கோவில் முன்பாக இன்று பொது மக்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு பேரூராட்சியின் சேர்மன் ஜெயராமன், பேரூர் நகர செயலாளர் சத்யபிரகாஷ், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் உஷாராணி , செயல் அலுவலர் சகாய அந்தோணி யூஜின், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் முருகானந்தம் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஆகியோர் வழங்கினார்கள். ஆடிப்பெருக்கு நாளை முன்னிட்டு பொதுமக்கள் அதிகம் இன்று கோவிலுக்கு வந்து செல்வதால் அப்பகுதியில் அனைவருக்கும் துணி பைகள் வழங்கி பிளாஸ்டிக் கேரி பைகளை தவிர்க்க வேண்டுமாறு கேட்டுக் கொண்டனர்.
