கன்னியாகுமரி மாவட்டம், சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் சித்திரை தெப்பத்திருவிழா நடைபெற இருப்பதால், அங்கு சுற்றுலா கடைகள் ஏலம் விடப்பட்டுள்ளன.
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் தாணுமாலய சாமிகோவிலில் சித்திரை தெப்பதிருவிழா வருகிற 21ஆம் தேதி வெள்ளிக்கிழமையன்று கொடியேற்றத்துடன் தொடங்கி தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுகிறது. திருவிழா காலங்களில் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் கடை நடத்த தனி நபருக்கு பேரூராட்சி நிர்வாகம் ஏலம் விடுவது வழக்கமான நடைமுறையாகும். அது போல் சித்திரைத் திருவிழாவை யொட்டி 10 நாட்கள் பேரூராட்சிக்கு சொந்தமான இடங்களில் தற்காலிக கடைகள் நடத்த ஏலம் நேற்று பேரூராட்சி அலுவல கத்தில் நடைபெற்றது. ஏலத்திற்கு பேரூராட்சி தலைவி அனுசியா தலைமை தாங்கினார். செயல் அலுவலர் கமலேஸ்வரி முன்னிலை வகித்தார் 10 நாட்கள் தற்காலிக கடை நடத்துவதற்கான ஏலம் ரூ. 49 ஆயிரத்திற்கு விடப்பட்டது.