வீதிகளை மீறி அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் மதுரை கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெற்றது.
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி மதுரை,விருதுநகர் ,தென்காசி மாவட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு சார்பாக மதுரை கலெக்ட்ர் அலுவலகம்முன்பு கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றக்கோரி பலமுறை ஆர்ப்பாட்டம்,மறியல் உள்ளிட்ட பல போராட்டங்கள் நடைபெற்றுள்ளன.மதுரை மாவட்ட கலெக்டர்,முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தற்போதைய அமைச்சர் பி.மூர்த்தி ஆகியோர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. ஆனால் அவை முழுமையான் தீர்வாக அமையவில்லை.
கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் .ஒன்றிய மோடி அரசுக்கும்,இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் சுங்கச்சாவடி அகற்றுவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வைக்கப்பட்டுள்ளன.கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரை கலெக்டர் அனிஷ்சேகரிடம் மனு அளிக்கப்பட்டள்ளது.
பொட்ரோல் ,டிசல் விலையை குறைக்க வேண்டும்,வாகனங்களுக்கு மறுபதிவு எப்.சி கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும்,தமிழ்நாட்டில் உள்ள காலாவதியாகிப்போன சுங்கச்சாவடிகளை அகற்றவேண்டும்.திருமங்கலம் நகராட்சி எல்லையிலிருந்து 5 கிமீட்டர் தொலைவிற்குள் சுங்கச்சாவடி அமைக்ககூடாது எனவிதிமீறி அமைந்துள்ள கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றவேண்டும் .
தென்காசி -திருமங்கலம் நெடுஞ்சாலை N.H.744 மார்க்கத்தில் வரும் வாகனங்கள் கப்பலூர் சுங்கச்சாவடியை நான்குவழிச்சாலை வழியாக கடக்க 3 கி.மீட்டர்தூரம்மட்டுமே பயணிக்கின்றன.இதற்கு சுங்ககட்டணம் வசூல் செய்வது அப்பட்டமான பகல்கொள்ளை எனவே கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்ற வேண்டும். மேலும் சுங்கச்சாவடிக்கு அருகில் உள்ள கப்பலூர் உள்ளிட்ட பல கிராமங்களின் சாலைகளை ஆக்கிரமித்து அடைத்து சுங்ககட்டணம் வசூல் செய்யும் கப்பலூர் சுங்கச்சாவடியை உடனடியாக அகற்ற வேண்டும் என.ஒன்றிய மோடி அரசுக்கும்,இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்தகவனஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மதுரைமாநகர்,புறநகர்,விருதுநகர் ,தென்காசி மாவட்ட அனைத்து வாகன உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் மற்றும் சாலை போக்குவரத்து தொழிலாளர்கள் சங்கங்களின் ஒருங்கினைப்பு குழு சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.