• Mon. Jun 15th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

தமிழக முதல்வர் விஜய் 52 பிறந்தநாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம்..,

ByRadhakrishnan Thangaraj

Jun 15, 2026

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் தமிழக முதல்வர் ஜோசப் விஜய் 52 வது பிறந்த நாளை முன்னிட்டு கழக பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. ஆனந்த் அறிவுறுத்தலின்படி, மாவட்ட கழக செயலாளர் மற்றும் சமூக நலன் மகளிர் மேம்பாட்டு துறை அமைச்சர் மற்றும் விருதுநகர் மாவட்ட பொறுப்பு அமைச்சர் திருமதி. கு ஜெகதீஸ்வரி வழிகாட்டுதலின்படி

விருதுநகர் மாவட்ட கழக துணைச் செயலாளர் Dr. யமுனா ஏற்பாட்டிலும்,

மருத்துவ முகாம் மற்றும் ரத்ததான முகாம் பெரிய கடை பஜார் AK மருத்துவ மனையில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் எலும்பு தேய்மானம் சம்மந்தமான நோய்களுக்கும் மற்றும் இரத்த சர்க்கரை நோய்களுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்கப்பட்டு மருந்து மாத்திரைகள் இலவசமாக வழங்கபட்டன.

அதேபோல் எக்ஸ்ரே ரத்த பரிசோதனை போன்றவை இலவசமாக வழங்கப்பட்டது நோயாளிகளுக்கு மருத்துவர் ஆனந்த கிருஷ்ணன் மருத்துவ சிகிச்சை அளித்தார்.

இந்த வழக்கறிஞர் ராஜா மற்றும்மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி நிர்வாகிகள், நகர, ஒன்றிய, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.