

திரிபுராவில் முஸ்லீம்கள் மீதான தாக்குதலை கண்டித்து பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
திரிபுராவில் முஸ்லீம்கள் மீது பயங்கரவாதிகளால் நடத்தப்பட்டுவரும் தொடர்தாக்குதல்களை கண்டித்தும், வன்முறைக்கு துணை போகும் திரிபுரா மாநில பாஜக அரசை கண்டித்தும் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக எதிரில் நடந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் முஹம்மது ஜிஸ்தி தலைமை வகித்தார். செயலாளர் சலீம் வரவேற்றார். ஆர்பாட்டத்தில் அகில இந்திய இமாம் கவுன்சில் மாநில செயற்குழு உறுப்பினர் சவுக்கத்அலிஉஸ்மானி, மாநில பேச்சாளர் செய்யது அலி, மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் உசேன் ஆகியோர் பேசினர். மாநில செயற்குழு உறுப்பினர் அன்சார் நன்றி கூறினார். ஆர்பாட்டத்தில் பாஜக அரசை கண்டித்து கோஷங்கள்.
