

செங்குன்றம் சோத்துபாக்கம் கிராமம் ஸ்ரீஜெயதுர்கா நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயர் ஆலயத்தில் ஸ்ரீராம நவமி தினத்தை முன்னிட்டு திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி நடைபெற்றது.
முன்னதாக மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டு வடைமாலை சாத்தி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
அதனைத் தொடர்ந்து ஸ்ரீசீதாதேவி-ஸ்ரீராமசந்திரன் உற்சவருக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து பின்னர் வண்ணமலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு கணபதி ஹோமத்துடன் ஸ்ரீசீதாதேவிக்கும்-ஸ்ரீராமசந்திரன்க்கும் மந்திரங்கள் முழங்க மேளதாளத்துடன் திருக்கல்யாண வைபவம் நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதனையடுத்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இதில் ஆலய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட செங்குன்றம் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். முடிவில் ஆலயம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.

