விருதுநகர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பங்குனி பொங்கல் திருவிழாவினை முன்னிட்டு இன்று இராஜபாளையம் அருள்மிகு ஸ்ரீமாரியம்மன் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. இந்நிகழ்வில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி தரிசனம் மேற்கொண்டார். மேலும் இந்நிகழ்வின்போது விருதுநகர் மாவட்ட, மற்றும் இராஜபாளையம் சட்டமன்றத்தொகுதி கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.