ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24 தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இதை முன்னிட்டு மக்கள் நீதி மய்யம் கட்சி நிர்வாகிகளுடன் கமல்ஹாசன் இன்று ஆன்லைனில் உரையாற்றுகிறார்.
பஞ்சாயத்துராஜ் தினத்தை முன்னிட்டு கிராமசபைக்கூட்டம் நடைபெற உள்ளது.கிராமசபை கூட்டங்களுக்கு முக்கியதுவம் அளித்துவரும் மநீம நிறுவனர் கமல்ஹாசன் அவரது கட்சி நிர்வாகிகளுடன் ஆன்லைனில் உறையாற்ற உள்ளார்.
இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட அறிக்கை:
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான இன்று (ஏப்.24) தமிழகம் முழுவதும் சிறப்பு கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளதாக அரசு அறிவித்துள்ளது. அதிகாரங்களை பரவலாக்கும் பஞ்சாயத்து ராஜ் சட்டம் குறித்தும், கிராம சபைகள் குறித்தும் பரவலான விழிப்புணர்வை கொண்டுவந்து, கிராம சபை கூட்டங்களில் மக்கள் பங்கேற்பை அதிகப்படுத்தியதில், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் அளப்பரிய பங்களிப்பு தமிழகம் அறிந்ததே.
மாதிரி கிராம சபை கூட்டங்கள் நடத்தி, கிராம சபை கூட்டங்களில் நேரடியாக பங்கேற்று, கிராம சபைகளின் உரிமைகளுக்காக கமல்ஹாசன் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். அவர், தேசிய பஞ்சாயத்து ராஜ் தினமான ஏப்.24-ம் தேதி (இன்று) காலை 10 மணிக்கு இணையவழியில் பங்கேற்று உரையாற்ற உள்ளார். அவரது தலைமையில் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மக்கள் ஆகியோர் கிராம வளர்ச்சிக்கான உறுதிமொழியும் ஏற்றுக்கொள்கின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
ஏப்.24-பஞ்சாயத்து ராஜ் தினம்: தனதுகட்சி நிர்வாகிகளுடன் இணையவழியில் கமல் இன்று உரை
