Directors Club என்ற வாட்ஸப் செயலியில் உதவி இயக்குநர்களுக்காக இயங்கி வரும் குழு சார்பில் நடந்த ஆண்டு விழாவில் இந்தியாவிலேயே முதல் முறையாக உதவி இயக்குநர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டது.கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக உதவி இயக்குநர் சக்தி அவர்களால் வாட்ஸ் ஆப் செயலியில் இக்குழு ஆரம்பிக்கப்பட்டது.
இக்குழுவில் தமிழ் சினிமாவின் உதவி இயக்குநர்கள் உறுப்பினர்களாக இணைந்தனர். இயக்குனர்கள மணிரத்னம், SS ராஜமௌலி, ஒளிப்பதிவாளர்கள் சந்தோஷ் சிவன், ரவிவர்மன், கதாநாயகர்கள் விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பலர் என சினிமாவின் அனைத்து துறையினரும் இக்குழுவில் வந்து உதவி இயக்குநர்களோடு கலந்துரையாடி வருகின்றனர்.
,உதவி இயக்குனர்களுக்கு ஒரு அரிய களமாகவும், அவர்களுக்கு இலவச பயிற்சி பட்டறையாகவும் விளங்கும் Directors Club குழுமம் 5 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது.Directors Club நான்காம் ஆண்டு மற்றும் ஐந்தாம் ஆண்டு நிறைவு விழா சென்னை ராணி சீதை ஹாலில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மற்றும் நடிகர் விஜய் அவர்களின் தந்தையுமான SA சந்திரசேகர் அவர்கள், மற்றும் இயக்குநரும் நடிகருமான மாரிமுத்து அவர்கள்,மற்றும் நடிகர் காளி வெங்கட் உட்பட எண்ணற்ற பிரபலங்கள் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் இந்த வருடம் வெளியானதிரைப்படங்களில் ஒரு சிறந்த படத்தை Director’s club, உறுப்பினர்கள் வாக்கு அடிப்படையில் தேர்ந்தெடுத்து, அதில் பணியாற்றிய உதவி இயக்குநர் குழுவிற்கு, விழாவில் விருது வழங்கும் விதமாக, தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பட்டா பரம்பரை திரைப்பட உதவி இயக்குநர் குழுவிற்கு விருதுகள் வழங்கப்பட்டது.
இந்தியாவிலேயே உதவி இயக்குநர்கள் அங்கிகரிகப்படுவதும் அவர்களுக்கு விருது வழங்கப்படுவதும் இதுவே முதல் முறை. இந்த ஆண்டின் நிறைவில் Director’s Club அரசு அங்கீகாரம் பெற்றுள்ளது. உதவி இயக்குநர்களுக்கான இலவச பயிற்சி பட்டறையாகவும், அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரும் களமாகவும் செயல்பட்டு வருகிறது.