• Tue. Jul 7th, 2026
WhatsAppImage2026-07-03at000327
previous arrow
next arrow
Read Now

​கம்பம் நகராட்சிப் பகுதியில் அரசு உதவிபெறும் பள்ளியில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு..,

தேனி மாவட்டம் கம்பம் நகராட்சிப் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
​இந்த ஆய்வின்போது மாணவர்கள் மத்தியில் பேசிய அவர், “போதையில்லா தமிழகத்தை உருவாக்கும் நோக்கில் நமது முதலமைச்சர் ஜோசப் விஜய் பல்வேறு விழிப்புணர்வுப் பேரணிகளையும் திட்டங்களையும் நடத்தி வருகிறார். எனவே, மாணவர்கள் யாரும் போதை பழக்கங்களுக்கு அடிமையாகக் கூடாது” என்று அறிவுரை வழங்கினார்.

​மேலும், “உங்களுக்குத் தெரிந்தவர்களோ அல்லது சக மாணவர்களோ ஏதேனும் போதை பழக்கத்தில் ஈடுபட்டிருந்தால், அதுகுறித்த தகவலை உடனடியாகத் தலைமை ஆசிரியரிடமோ அல்லது என்னிடமோ தெரிவிக்கலாம்” என்றும் கூறினார்.

​தொடர்ந்து, ஒவ்வொரு வகுப்பறைக்கும் சென்ற சட்டமன்ற உறுப்பினர், மாணவர்களுடன் கலந்துரையாடினார். சில நிமிடங்கள் மாணவர்களுடன் ஒரே பெஞ்சில் அமர்ந்து சகஜமாகப் பேசினார்.

​அப்போது, “மாணவர்கள் அனைவரும் சிறப்பாகப் படித்து, பெற்றோர்களுக்குப் பெருமை சேர்க்க வேண்டும்; வாழ்க்கையில் நல்ல முன்னேற்றப் பாதையை நோக்கிச் செல்ல வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.