மதுரையில் போதை பொருள் தடுப்பு விழிப்புணர்வு மினி மாராத்தான் போட்டியில் ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்பு…
போதை பொருள் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மதுரை மாவட்ட நிர்வாகத்தோடு இணைந்து பினாக்கல் அமைப்பு சார்பில் மினி மாராத்தான் நடைபெற்றது. மதுரை எம்.ஜி.ஆர் விளையாட்டு அரங்கத்தில் துவங்கிய மாராத்தான் போட்டியை கலெக்டர் அனீஷ் சேகர் கொடியசைத்து துவக்கி வைத்தார். 21 கிலோ மீட்டர், 10 கிலோ மீட்டர், 5 கிலோ மீட்டர், 3 கிலோ மீட்டர் என 4 பிரிவுகளாக நடைபெற்ற மாராத்தானில் 1500க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் இளைஞர்கள் கலந்து கொண்டனர். மாராத்தானில் கலந்து கொண்ட அனைவரும் போதை பொருட்களுக்கு எதிரான வாசகங்கள் அடங்கிய ஜெர்ஸியை அணிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.