

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். முகவர்களிடமிருந்த கணக்கில் வராத 1,83,900 பணம், போலி அரசு முத்திரைகள் பறிமுதல்.
தமிழகத்தில் தீபாவளி பண்டிகையையொட்டி பல்வேறு அரசு அலுவலங்களில் அதிகளவில் லஞ்சபணம் கைமாற்றம் நடைபெற்றுவருவதாக தகவல் வந்த நிலையில், தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலுள்ள அரசு அலுவலங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டுவருகின்றனர்.

அதன் ஒரு பகுதியாக கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு அருகே கோழிப்போர்விளையில் அமைந்துள்ள மார்த்தாண்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தீபாவளி நெருங்கி வரும் நிலையில் லஞ்சப் பணம் கைமாறுதல் நடந்து வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு துறை துணை கண்காணிப்பாளர் பீட்டர் பால் தலைமையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கிடைத்த தகவலின் அடிப்படையில் அலுவலகத்தின் வெளியே இருந்த முகவர்களிடமிருந்த கணக்கில் வராத 1,83,900 ரூபாயை பணம் மற்றும் போலியாக தயாரிக்கபட்ட வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர் மற்றும் அலுவலக முத்திரைகளையும் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வழக்குபதிவு செய்தனர். வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
