

டி20 உலகக் கோப்பை தொடரில் நேற்று பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு செய்தது.
முதலில் ஆடிய ஆப்கானிஸ்தான் 76 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தத்தளித்தது. அதன்பின், கேப்டன் முகமது நபி, குல்பதின் நயிப் இருவரும் அதிரடியாக ஆடினர். இறுதியில், ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுக்கு 147 ரன்கள் சேர்த்தது. முகமது நபி, குல்பதின் நயிப் தலா 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
148 எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடியது பாகிஸ்தான். பாபர் ஆஸம் 51 ரன்கள், ஃபாக்கர் ஜமான் 30 ரன்கள், ஆசிப் அலி 25 ரன்கள் எடுக்க பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளை சூப்பர் 12 சுற்றில் பதிவு செய்துள்ளது பாகிஸ்தான். இந்தியா, நியூசிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தியுள்ளது. இதன் மூலம் குரூப் 2-வில் முதலிடத்தில் நீடித்து வருகிறது பாகிஸ்தான்.
