

வத்திராயிருப்பு சுற்று வட்டார பகுதியில் அரை மணி நேரத்திற்கு மேலாக வெளுத்து வாங்கிய கனமழை., மது போதையில் சாலையில ஓடிய மழைநீரில் அந்தர்பல்டி அடித்து அசராமல் எழுந்து சென்ற வாலிபர் …
தமிழகத்தில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியின் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், கடந்த சில தினங்களாக பல பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை பொருத்தவரை கடந்த இரண்டு தினங்களாக வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டது. இந்நிலையில் மாலையில் தீடிரென வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கூமாபட்டி, கான்சாபுரம், தம்பிபட்டி, மகாராஜபுரம், கோபாலபுரம், பிளவக்கல் அணை உள்ளிட்ட பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்து சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த நிலையில் வத்திராயிருப்பில் சாலையில் ஓடிய மழை நீரில் மது போதையில் வாலிபர் ஒருவர் அந்தர்பல்டி அடித்து அசராமல் எழுந்து சென்றார்.
