ஆண்டிபட்டி அருகே திருமலாபுரம் ஊராட்சியில் அம்ரித் சரோவர் திட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகளை திட்டத்தின் கண்காணிப்பு அலுவலர் கார்த்திக் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் க.வி .முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர் .
மத்திய, மாநில அரசுகள் தமிழகத்தில் பாசனத்திற்கான வளர்ச்சித் திட்ட பணிகளை அம்ரித் சரோவர் என்ற திட்டத்தின் மூலம கண்மாய்களை தூர்வாருதல் , பராமரித்தல் ஆழ்துளை கிணறுகள் அமைத்தல் ,பேவர் பிளாக் பதித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்ய ஆணை பிறப்பித்துள்ளது.
அதன் அடிப்படையில் ஆண்டிபட்டி ஒன்றியம் திருமலாபுரம் ஊராட்சியில் நேற்று இந்திரா நகரில் முன்பாக அமைக்கப்பட்ட ரூ 7.97லட்சத்தில் தூர்வாரப்பட்ட கண்மாயினை கண்காணிப்பாளர் கார்த்திக் மற்றும் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது திட்ட அலுவலர் தண்டபாணி ,ஆண்டிபட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் மலர்விழி ,ஒன்றிய பொறியாளர்முத்துக்கனி, மாவட்ட மக்கள் தொடர்பு உதவி அலுவலர் விஜயகுமார், ஊராட்சி மன்ற தலைவர் கனி ராஜா ,ஒப்பந்ததாரர் பிரகாஷ் உள்பட அலுவலர்கள் உடன் இருந்தனர்.