இந்த வருடம் கொரோனா இரண்டாவது அலை பரவ ஆரம்பித்த கடினமான சூழலில் தான் கணேஷ் விநாயகன் இயக்கிய ‘தேன்’ படம் வெளியானது. ஆனால் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் ஒரு சேர பாராட்டுக்களை பெற்றது. மேலும் பல தேசிய மற்றும் சர்வதேச திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு பல பிரிவுகளில் கிட்டத்தட்ட ஐம்பது விருதுகளை வென்று வந்துள்ளது.
இந்தப்படத்தில் வேலு என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
படத்தின் நாயகன் தருண்குமார், கடந்த சில மாதங்களுக்கு முன் 11வது தாதா சாஹிப் பால்கே திரைப்பட விழாவில் தேன் படம் திரையிடப்பட்டதில், தருண்குமார் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். இந்தநிலையில் தேன் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக பீகாரில் நடைபெற்ற தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவில் மீண்டும் ஒரு முறை சிறந்த நடிகர் விருதை பெற்றுள்ளார் தருண் குமார்.
.இதுபற்றி தருண் குமார் பேசும்போது, “ஒருவரின் கடினமான உழைப்புக்காக கிடைக்கும் விருது என்பது உண்மையிலேயே அவருடைய வாழ்க்கையில் எப்போதுமே பெற்றிராத சந்தோஷமான தருணங்களில் முக்கியமான ஒன்றாக இருக்கும்.. இது தேன் படத்திற்காக நான் இரண்டாவது முறையாக பெறும் விருது.. முன்னதாக தாதா சாகிப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த நடிகருக்கான முதல் விருதை பெற்றேன். தற்போது தர்பங்கா சர்வதேச திரைப்பட விழாவிலும் எனது நடிப்பிற்கான அங்கீகாரம் கிடைத்து,
அதற்காக இந்த சிறந்த நடிகர் விருது எனக்கு வழங்கப்பட்டுள்ளது குறித்து இன்னும் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். தேன் படத்தில் நான் நடித்திருந்த வேலு கதாபாத்திரத்தில் நடித்தது மிகவும் கடினமான மற்றும் சவாலான ஒன்றாகவே இருந்தது. என் உடலில் உள்ள காயங்களும் தழும்புகளும் அந்த கடின உழைப்பை இன்னும் ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கின்றன.
நீங்கள் உங்களுடைய இதயத்தையும் ஆன்மாவையும் நூறு சதவீதம் நேர்மையாக உங்களது கதாபாத்திரத்திற்கு கொடுக்கும்போது அது எல்லைக்கோடுகளையும் கலாச்சாரங்களையும் தாண்டி மக்களின் இதயங்களை தொட்டுவிடும். இதுபோன்ற விருதுகள் தான், நல்ல படங்களையும் கதாபாத்திரங்களையும் ஒரு நடிகராக தேர்ந்தெடுத்து நடிப்பதற்கான தூண்டுதலாக எங்களுக்கு நிச்சயம் இருக்கும். கிட்டத்தட்ட பத்து வருடங்களாக எனது போராட்டத்திற்கும் கடின உழைப்புக்குமான ஒரு அங்கீகாரத்தையும் வெற்றியையும் இந்த படம் எனக்கு கொடுத்துள்ளது.
தர்பங்கா என்பது பீகார் மாநிலத்தில் கலைகளின் தலைநகரமாகும். அப்படிப்பட்ட தர்பங்காவில் நடைபெறும் சர்வதேச திரைப்பட விழா என்பது இந்திய திரைப்பட விழாக்களில் மிக முக்கியமான ஒன்று. அந்த திரைப்பட விழாவில் எனக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்திருப்பதை ஒரு சாதனையாகத்தான் நான் கருதுகிறேன். மேலும் வரும் டிசம்பர் 29 முதல் ஜனவரி 6 வரை நடைபெற உள்ள சென்னை சர்வதேச திரைப்பட விழாவிலும் தேன் திரைப்படம் திரையிட தேர்வாகியுள்ளது என்றார்.
- சிறப்பாக பணியாற்றிய தூத்துக்குடி காவல்துறையினர்க்கு பாராட்டுதூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மாதம் சிறப்பாக பணியாற்றிய 3 காவல் ஆய்வாளர்கள் உட்பட 54 காவல்துறையினர், […]
- மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவுதென்னிந்தியாவில் முதன்முறையாக மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் நரம்பியல் தீவிர சிகிச்சை பிரிவு தொடங் கப்பட்டு உள்ளது […]
- பாஜக 99 -ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி விழிப்புணர்வு பிரச்சாரம்சோழவந்தானில் பாஜக 99 ஆவது மனதின் குரல் நிகழ்ச்சி பிரச்சார விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் […]
- மஞ்சூரில் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம்மஞ்சூர் குந்தா வட்டம் அனைத்து அரசியல் கட்சி சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழுகூட்டம் மஞ்சூரில் நடைபெற்றதுகுந்தா […]
- நூறு சதவிகிதம் இந்தி மொழியை அமலாக்கம் தொடர்பான சுற்றரிக்கையை திரும்பபெறுக சு. வெங்கடேசன் எம்.பிதென்னக ரயில்வேயின் 169 ஆவது அலுவல் மொழி அமலாக்க குழு கூட்ட சுற்றறிக்கையைப் பார்த்தேன். அதில் […]
- பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம்வாடிப்பட்டியில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் ஆலோசனையின் பேரில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் பிறந்த நாளை […]
- ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஓவியப்போட்டி..!உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு, ராமேஸ்வரத்தில் பள்ளி மாணவர்களுக்கான ஓவியப்போட்டி நடைபெற்றது.ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் பேய்கரும்பு […]
- பழனி முருகன் கோயில் வெளிப்பிரகாரத்தில் ‘கூலிங் பெயிண்ட்’அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் வெயிலின் தாக்கத்தைக் குறைக்கும் வகையில், […]
- மரக்காணம் அருகே பறவைகள் சரணாலயம்..!விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே பறவைகள் வந்து செல்லும் வலசை பகுதியில் பறவைகள் சரணாலயம் அமைக்கப்படும் […]
- அதிகார வெறி பிடித்த சர்வாதிகாரி முன்பு எங்கள் குடும்பம் ஒருபோதும் அடிபணியாது- பிரியங்கா காந்திராகுல்காந்தி தகுதி நீக்கம் தொடர்பாக, காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் அதிகார வெறி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் ரியல் ஹீரோ: ஓர் உளவியல் பதிவு..! உண்மையில் உங்கள் டீன் ஏஜ் மகளுக்கு அம்மாவை […]
- நீலகிரி மாவட்ட தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் உள்ளிருப்பு போராட்டம்நீலகிரி மாவட்ட அரசு தாவரவியல் பூங்கா தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2 வது நாளாக […]
- சோழவந்தானில் புனித ரமலான் நோன்பு தராஃபி தொழுகையில் முஸ்லிம்கள்மதுரை மாவட்டம் சோழவந்தானில் உள்ள பள்ளிவாசலில் புனித ரமலான் நோன்பு தராபிக் தொழுகையில் ஏராளமான இஸ்லாமிய […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 410விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல்கற்றாரோடு ஏனை யவர்.பொருள் (மு.வ): அறிவு விளங்குதற்குக் காரணமான நூல்களைக் கற்றவரோடுக் […]