



தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில் மக்கள் முதல்வரின் மனிதநேய விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக துறைமுகம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொண்டித்தோப்பு பெத்து நாயக்கர் தெரு, வள்ளலார் நகர் பிடாரியார் தெரு ஆகிய பகுதிகளில் அன்னம் தரும் அமுதக்கரங்கள் நிகழ்வில் கலந்து கொண்டு ஏழை எளிய பொதுமக்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் சென்னை கிழக்கு மாவட்ட செயலாளருமான பி.கே.சேகர்பாபு காலை உணவு வழங்கினார். இதில் கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு,
திமுகவினர் குற்றப் பின்னணியில் உள்ள அமைச்சர்கள் என்று சொல்வது பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை மனதில் வைத்து அண்ணாமலை சொல்லி இருப்பார்.
படிக்காதவர்கள் எப்படி பள்ளியை பற்றி பேசுகிறார்கள் என்று சொல்கிறார் அண்ணாமலை.
காமராஜரை களங்கப்படுத்தும் விதமாக தான் அண்ணாமலையின் கூற்று உள்ளது, படிப்பிற்கும் மனதிற்கும் சேவைக்கும் சம்பந்தமில்லை, மனிதாபிமானம் கொண்டிருப்பவர்கள் யார் வேண்டுமானாலும் உயர்ந்த பதவிக்கு வந்தாலும் மக்கள் தேவையை தலையாய கடமையாக்கி செயல்படுவது என்பது அண்ணாமலை போன்ற தற்குறிகளுக்கு தெரியாது.
அண்ணாமலை ஒரு டூப் போலீஸ் லஞ்சம் வாங்கிய பேர்விழி என்று நான் கூட கடுமையான குற்றச்சாட்டை வைக்கிறேன் ஆதாரம் இல்லாமல் வாய் புளித்ததோ, மாங்கா புளித்ததோ என்று பேசுவது எப்படி, ஏதாவது ஆதாரத்தைக் காட்டி குற்றம் சாட்டி இருந்தால் பரவாயில்லை, போகிற போக்கில் பேசுவது எப்படி, குற்றவாளி என்று சொல்வதற்கு ஆதாரத்தை காட்டச் சொல்லுங்கள் என்றார்.
அண்ணாவால் வளர்க்கப்பட்டவர்கள் கூண்டுக்கிளிகள் அல்ல கூவும் குயில்கள் திமுக பல கோடி மக்களுக்கு நிழல் தரக்கூடிய இயக்கமாக உள்ளது, திமுக கூவுகின்ற குயிலாக தான் இருக்கிறது, கூண்டுக்கிளியாக அல்ல இதற்கெல்லாம் ஊசிப்போன பண்டமாக இருக்கக்கூடிய பாரதிய ஜனதாவை 2026 ஆம் ஆண்டு மக்கள் தூக்கி எறிய தயாராக உள்ளனர்.
சிறைக்கு அஞ்சாத சிங்கங்கள்தான் திமுகவினர், நீதிமான்களையே தவறாக பேசுபவர்கள் நாங்கள் அல்ல சிறை என்றாலும் சிரித்த முகத்தோடு எதிர் கொள்பவர்கள் தான் நாங்கள் என்று எச்.ராஜாவிற்கு பதிலடி கொடுத்தார்.
இந்தியாவின் வரைபடத்தில் கீழே உள்ள தமிழ்நாட்டை இந்தியாவின் வரைபடத்தில் மேலே உள்ளவர்களும் திரும்பிப் பார்க்கின்ற நிலைமையை தமிழ்நாடு முதலமைச்சர் ஏற்படுத்தியிருக்கிறார் அது கும்மிடிப்பூண்டியா அல்லது டெல்லி செங்கோட்டையா என்று தெரியும்.
40க்கு 40 தொகுதியில் வெற்றி பெற்று பாஜகவை அலறவிட்டுள்ளோம், 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 200க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என்றார். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பிரச்சனைகளை திசை திருப்பவே கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் என்று எதிர்க்கட்சித் தலைவரின் பேச்சுக்கு பதில் அளித்த அமைச்சர்.
தமிழ்நாடு தாண்டி ஒன்றியத்தை தாண்டி உலகளவில் புகழப்பட்டுக் கொண்டிருக்க கூடிய இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட அபாண்ட குற்றச்சாட்டுகளால் நிதிநிலை அறிக்கையின் மகத்துவத்தை குளைப்பதற்காத்தான இப்படி தமிழக அரசு மீது அவதூறுகளை அள்ளி வீசுகிறார்கள்.
திமுகவை நம்பி வந்தவர்கள் யாரும் இதுவரை ஏமாந்தது கிடையாது, திமுகவை நம்பாதவர்கள் தான் இதுவரை ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள், அளித்த வாக்குறுதிகளை செயல்படுத்தக்கூடிய முதலமைச்சரை தமிழ்நாடு பெற்று இருப்பதால் 2026 ஐ நோக்கி பயணத்தை மேற்கொண்டு இருப்பவர்கள் ஒரு சிலரின் பகல் கனவு, மணலிலே கயிரை திரிக்கலாம், வானத்தை வில்லக்கலாம் என்று சொல்பவர்களின் பேச்சை எல்லாம் தமிழக மக்கள் கேட்க தயாராக இல்லை நிச்சயம் இயன்றவரை பொருளாதார சூழ்நிலையோடு அரசு ஊழியர்களுக்காக தமிழ்நாடு முதல்வர் பாடுபடுவார்.
ஒன்றியத்தில் அதிகாரக் குவியலும் பொருளாதார குவியலும் ஒரே இடத்தில் குவிந்து இருப்பது சர்வாதிகாரத்திற்கு ஒப்பாகும், பந்தியில் உட்கார்ந்து இருக்கக்கூடிய சக மனிதர்களுக்கு பரிமாறும் பொழுது ஒருவருக்கு வடை பாயாசம் கூட்டு பொரியலோடு பரிமாறுவது ஒருவருக்கு மோறு சாதம் அளிக்கும் நிலையில் ஒன்றிய அரசு இருப்பதால்தான் இப்படிப்பட்ட சூழல்கள் சற்று காலதாமதமாக திட்டங்களை நிறைவேற்றக்கூடிய வாக்குறுதிகளாக மாறுகிறது, நிச்சயம் இவை அனைத்தையும் உடைத்தெறிந்து கஜானா காலி என்றாலும் அனைத்து திட்டங்களையும் தமிழ்நாட்டு முதல்வர் நிறைவேற்றி காட்டுவார்.
மத்திய அரசை இணைக்கும் வலு உள்ள இணைப்பாளராக அதிரடியாக களத்தில் நின்று இரும்பு மனிதர் என்று வல்லபாய் பட்டேலுக்கு பிறகு போற்றப்படுகின்ற முதல்வர் இருக்கக் கூடிய மாநிலம் தமிழ்நாடு 2026 ஆம் ஆண்டு பாஜகவிற்கு மக்கள் சப்பை கட்டு கட்ட தயாராக இருக்கிறார்கள் என்று கூறினார்.

