• Mon. Jun 1st, 2026
WhatsAppImage2026-05-28at214307
previous arrow
next arrow
Read Now

மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் ருசிகர பேச்சு..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2026

துருப்பிடித்து தே ய்வதையை விட உழைத்து தேய்வதே சிறந்தது என்று காஞ்சி மகா பெரியவர் ஜெயந்தி விழாவில் தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் பேசினார்

காஞ்சி மகா பெரியவரின் 133 வது ஜெயந்தி விழா ஆண்டாள்புரம் விஷ்வாஸ் கருத்தரங்கு கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் சந்தோஷ் சாஸ்திரிகள் தலைமையில் 12 வேத விற்பனர்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு ஹோமம், மதன்யாசம் அதனைத் தொடர்ந்து மகா பெரியவர் விக்கிரகம் மற்றும் வெள்ளிப் பாதுகைக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்குரிய ஏற்பாட்டினை மதுரை அக்ஷய பாத்திர நிறுவனர் நெல்லை பாலு ஏற்பாடு செய்திருந்தார் .

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன், எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் ஆகியோர் பங்கேற்றனர்.

நிகழ்வில் மதுரை கூடல் அழகர் கோவில் சுரேஷ் பட்டர், தமிழ்நாடு பிராமண சமாஜ உப தலைவர் ஸ்ரீராமன், மிருதங்க இசைக் கலைஞர் லட்சுமண ராஜ் ஆகியோருக்கு மகா பெரியவா விருதினை வழங்கி தமிழக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசியதாவது

ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி மகா பெரியவா ஜெயந்தி விழா சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகிறது .

மனிதனுக்கு பொறுமை அமைதி மிகவும் அவசியம். எது நடப்பதோ அது நடந்தே தீரும் .நான் கல்லூரியில் படிக்கும் பொழுது வங்கி வேலைக்கு ஆசைப்பட்டேன் அந்த கனவு நடைபெறவில்லை, அதனைத் தொடர்ந்து லேபர் ஆபீஸரா கவும் ,தன்னார்வு நிறுவனம் அமைக்க ஆசைப்பட்டேன். எதுவும் நடக்கவில்லை அதனை தொடர்ந்து வழக்கறிஞராக படித்த பொழுது வக்கீல் வேலைக்கு ஆசைப்பட்டேன் ஆனால் எண்ணற்ற வக்கீல்கள்அதிகமாக இருந்தார்கள் அதனால் எனது ஆசை நிறைவேறவில்லை.
இதனைத் தொடர்ந்து எனது உடல் உள்ளம் ஆகியவற்றை ஒருங்கிணைந்து பொறுமையாக உழைத்தேன். இதனால் அம்மாவின் பார்வைப்பட்டு பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்து, 8 கோடி மக்களுக்கு சேவை செய்யும் பாக்கியத்தை பெற்றேன். குறிப்பாக கஜா புயலில் மக்களைக் காக்கும் புனித பொறுப்பில் இருந்தேன். அதனைத் தொடர்ந்து சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக ஐந்தாண்டுகள் பணியாற்றினேன் நடப்பது நடந்தே தீரும் என்பதற்கு இது ஒரு சான்றாகும் நடக்கப்போவது நடக்காமல் இருக்காது

அது மட்டுமல்லாது அப்துல் கலாம் மறைவின் போதும் பாரதப் பிரதமர் அவரகளுடன், அத்தி வரதர் விழாவில் ஜனாதிபதியுடன் ஒன்றாக விமானத்தில் பயணித்தேன். இதை நான் நினைத்து கூட பார்க்கவில்லை மேலும் கொரோனா காலங்களில் மக்களுக்காக பணி செய்தோம் இதை தான் நான் கனவில் கூட நினைத்துப் பார்க்கவில்லை

தற்போது தேர்தல் முடிவு தெரியும் இருந்தாலும் இதையெல்லாம் மனதை வைத்துக் கொண்டு எங்கும் முடங்க வில்லை .

துருப்பிடித்து தேய்வதை விட உழைத்து தேய்வதே மேல் என்ற லட்சிய கொள்கை உடையவன் நான் அதை தான் கடைபிடித்து வருகிறேன் இன்பம் துன்பம் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் நமக்கு வேண்டும் இருந்தால் நிச்சயம் நாம் வெற்றி பெறலாம். இதைத்தான் வாழ்க்கையை கடைப்பிடியுங்கள் என்று காஞ்சி ஸ்ரீ மகா பெரியவர் கூறினார்

பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் கூறியதாவது

மகா பெரியவருக்கு ஒரு பத்திரிக்கையாளர் உங்களுக்கு பிடித்த பண்டிகை எது தீபாவளியா பொங்கலா என்று கேள்வி கேட்டார் அப்போது மகா பெரியவர் எத்தனை பண்டிகை இருந்தாலும் எனக்கு பிடித்த பண்டிகை சங்கர ஜெயந்தி ஆகும் ஏனென்றால் சங்கர் இல்லை என்றால் இந்து மதம் இதுபோன்று வளர்ந்து இருக்காது பண்டிகை விசேஷ நாட்கள் என யாருக்கும் தெரியாமல் இருந்திருக்காது என கூறினார். நிகழ்ச்சிக்கு ஏற்பாட்டினை அனுஷத்தில் அலுவலகம் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.