• Thu. Apr 24th, 2025

கணவர் வேலையை விட சொன்னால் விட்டு விடக்கூடாது, கணவர்களை விட்டு விட வேண்டும் – சைலேந்திரபாபு பேச்சு!

Byஜெ.துரை

Mar 24, 2025

சென்னை மயிலாப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில், கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் கமலா 30 லட்சம் ரூபாய் நிதி உதவியில், புதுப்பிக்கப்பட்ட கணினி அறிவியல் ஆய்வுக்கூட திறப்பு விழா இன்று நடைபெற்றது.

இந்த விழாவில் கல்லூரி கல்வி ஆணையர் சுந்தரவல்லி, முன்னாள் டிஜிபி சைலேந்திரபாபு, முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், கல்லூரி முதல்வர் உமா மகேஸ்வரி உள்பட மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் விழாவில் பேசிய சைலேந்திரபாபு,

ஐஏஎஸ் அதிகாரிகளாக வரவேண்டும் என்று நினைக்கும் மாணவிகள், தமிழக அரசு வழங்கும் பயிற்சியை பெற்று தேர்ச்சி பெற்றால் உதவி தொகையுடன், நேர்முகத் தேர்வு வரை தமிழக அரசே பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது , அத்தகைய வாய்ப்பை மாணவிகள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கல்லூரியில் படிக்கும் போது அதில் கவனம் செலுத்த வேண்டும், அப்போது தான் வாழ்க்கையில் உயர முடியும்.

கல்லூரியில் தமிழ் படிப்பவர்களுக்கு தமிழில் எழுத தெரியவில்லை, ஆங்கிலம் படிப்பவர்களுக்கு ஒரு விடுமுறை கடிதத்தை கூட ஆங்கிலத்தில் எழுத தெரியவில்லை, இந்த அளவில் தான் தமிழகத்தில் கல்வித்தரம் இருக்கிறது.

எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள், முதலாம் வகுப்பு பாட புத்தகத்தை கூட படிக்கத் தெரியாத நிலை இருக்கிறது.

மாணவிகள், யாரையும் பேச்சை வைத்து ஒருவரை நம்ப கூடாது, ஒருவருடைய செயல்பாடுகளை வைத்து நம்ப வேண்டும்.

திருமணத்திற்கு பிறகு வேலையை விட்டு விட வேண்டும் என்று கணவர்கள் தெரிவித்தால், கணவனை விட்டு விட வேண்டுமே தவிர, வேலையை விட்டு விடக்கூடாது.

ஏனெனில் தமிழகத்தில் ஒரு ஆண்டுக்கு 75 ஆயிரம் பெண்கள், கணவர்கள் சரியில்லை என்று புகார் கொடுக்கிறார்கள், பத்து லட்சம் அளவிற்கு புகார்கள் மொத்தமாக வருகின்றன, முதலில் வேலையை விட்டு விடச் சொல்லும் கணவர்கள், அவர்களும் எவ்வித வருவாயை ஈட்ட முடியாமல், வேலைக்குச் செல்லாமல் இருப்பார்கள், கடைசியில் பெண்கள், பார்த்த வேலையை விட்டு விட்டால் பிறகு கஷ்டப்படக்கூடிய நிலை ஏற்படும்.

எனவே திருமணத்திற்குப் பிறகு செய்யும் வேலையை பெண்கள் விட்டு விடக்கூடாது என்று தெரிவித்தார்.