• Wed. Aug 26th, 2026
WhatsAppImage2026-08-20at214238
previous arrow
next arrow
Read Now

தென்காசியில் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு!

தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், தெற்கு மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் சிவ.பத்மநாதன் தலைமையில் பேரறிஞர் அண்ணாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய செயலாளர் சீனித்துரை, கழக மூத்த முன்னோடி பேச்சிமுத்து, மாவட்ட சிறுபான்மை பிரிவு துணை அமைப்பாளர் சேக் முகம்மது, 1வது வார்டு முன்னாள் கவுன்சிலர் ராமராஜ், மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் சாமிதுரை உட்பட பலர் கலந்துகொண்டனர்.

அப்போது சங்கரன்கோவில் அதிமுக முன்னாள் இளைஞர் பாசறை செயலாளரும் 8வது வார்டு வேட்பாளருமான திலீப்குமார் நெசவாளர் அணி அமைப்பாளர் சங்கை சரவணன் ஏற்பாட்டில் தெற்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் திமுகவில் இணைத்து கொண்டார்.