• Thu. Aug 13th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

காரைக்குடியில் தொடர் மழையால் வீடு இடிந்து முதியவர் பலி

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி சீனிவாச நகரில் தொடர் மழையால் வீடு இடிந்து வீரப்பன் ( 80) என்ற முதியவர் பலியானர்.

காரைக்குடியில் தொடர்ந்து ஒரு வாரமாக நல்ல மழை பெய்து வருகிறது. சீனிவாசா நகரில் வீரப்பன் வயது 80 மட்டும் வசித்து வருகிறார். இவரது ஓட்டு வீடு நேற்று இரவு இடிந்து விழுந்து உள்ளது. அருகில் வசிப்பவர்கள் காரைக்குடி தெற்கு காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததை தொடர்ந்து அங்கு வந்த காவல் துறையினர் வீட்டின் இடிபாடிகளில் சிக்கி உயிரிழந்த வீரப்பனின் உடலை மீட்டனர். தகவல் அறிந்த காரைக்குடி தாசில்தார் மாணிக்கவாசகம் சம்பவ இடத்திற்க்கு சென்று விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.

வீரப்பனின் உடலை பிரேத பரிசோதனைக்காக காரைக்குடி அரசு மருத்துவமனைக்குகாவல்துறையினர் அனுப்பி வைத்து காரைக்குடி தெற்கு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.