• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

போதை பொருள் மாணவர்களுக்கு விழிப்புணர்வு பிரச்சாரம்..,

ByKalamegam Viswanathan

Aug 12, 2026

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களது உத்தரவுப்படி தமிழகம் முழுவதும் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன..அதில் மதுரை மாநகர காவல்ஆணையர் திரு.ராஜேந்திரன் ips அவர்களது ஆணைக்கிணங்க, காவல் துணை ஆணையர் திருமதி வனிதா அவர்களது மேற்பார்வையில்.. போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்கள் மாணவர்கள் மத்தியில் நடைபெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக மதுரை தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் அ தங்கமணி.. திருப்பரங்குன்றம் அரசு மேல்நிலைப் பள்ளியில் போதை பொருள் ஒழிப்பு குறித்து சிறப்பு நடைபெறும் துவங்கி வைத்து.. மாணவர்களுக்கு போதை பொருள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு வழங்கினார்.

இந்த விழிப்புணர் நிகழ்ச்சியில் திருப்பரங்குன்றம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர் தார்ச்சுஸ்,சிறப்பு சார்பு ஆய்வாளர் அன்பு பள்ளி தலைமை ஆசிரியர் ஆசிரிய பெருமக்கள் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.