திருப்புவனம் அருகே, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கண்மாய்க்குள் பாய்ந்த காரில் இருந்த 5 பேரை இளைஞர் ஒருவர் காப்பாற்றி கரை சேர்த்த சம்பவம் நடைபெற்றுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வடகரையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன். மதுரையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் இவர், கடந்த 7ம் தேதி மாலை நிறுவனத்தின் வேலைக்காக ராமநாதபுரத்திற்கு காரில் சென்று கொண்டிருந்தார்.அப்போது, திருப்புவனம் தாண்டி சாலையை ஒட்டியுள்ள மாரநாடு கண்மாய்க்குள் இன்னோவா கார் ஒன்று மூழ்கிக் கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே காரை நிறுத்தி இறங்கி அருகில் சென்று பார்த்தார்.

இன்னோவா காருக்குள் இருந்து, ‘காப்பாற்றுங்கள்… காப்பாற்றுங்கள்…’ என்று அலறல் சத்தம் கேட்கவே, எதைப்பற்றியும் யோசிக்காமல், கண்மாய்க்குள் இறங்கி காரில் இருந்த இரண்டு குழந்தைகள், ஒரு பெரியவருடன் இருந்த தம்பதி என மொத்தம் 5 பேரை மீட்டு கரைக்கு கொண்டு வந்தார்.
அவர்கள், ரயில்வேயில் பணி புரிபவரின் குடும்பத்தினர் என்றும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்மாய்க்குள் பாய்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர்களை, பஸ்சில் ஏற்றி மானாமதுரைக்கு அனுப்பி வைத்துள்ளார் முத்துகிருஷ்ணன்.
அவர்கள், ரயில்வேயில் பணி புரிபவரின் குடும்பத்தினர் என்றும், மானாமதுரையில் இருந்து மதுரைக்கு செல்லும் வழியில், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் கண்மாய்க்குள் பாய்ந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவர் இந்த சம்பவத்தை அவருடன் சென்றவர் போட்டோ எடுத்து சமூக ஊடகத்தில் பகிர்ந்த பின்புதான், இப்படி ஒரு சம்பவம் நடைபெற்றது வெளியுலகுக்கு தெரிய வந்துள்ளது. இதையடுத்து, விபத்தைக் கண்டதும் தயங்காமல் கண்மாயில் இறங்கி 5 பேரை காப்பாற்றி கரை சேர்த்த முத்துகிருஷ்ணனை அனைவரும் பாராட்டி வருகின்றனர்..