• Wed. Aug 12th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திண்டுக்கல் மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட போதை பொருட்கள் அழிப்பு..,

ByS.Ariyanayagam

Aug 12, 2026

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கிராம் கஞ்சா அழிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டத்தில் போதைப்பொருள் தொடர்பாக பதிவு செய்யப்பட்ட 195 வழக்குகளில் 576 கிலோ கிராம் கஞ்சாவும், அதே போல் தேனி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 161 வழக்குகளில் 724 கிலோ கிராம் கஞ்சாவும் கைப்பற்றப்பட்டது.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட 356 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 1,300 கிலோ கிராம் கஞ்சாவினை திண்டுக்கல் சரக அளவிலான போதைப்பொருள் அழிப்பு குழு (Drug Disposal Committee) தலைவரான திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர் வி.சசிமோகன்.தலைமையில், அரசு வழிகாட்டு விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அழிக்கப்பட்டது.
238 இதுவரை 2026 ஆண்டில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் வழக்குகளில் 1067 கிலோ கஞ்சாவும் தேனி மாவட்டத்தில் 210 வழக்குகளில் 1159 கிலோ கஞ்சாவும் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும் திண்டுக்கல் மாவட்டத்தில் கஞ்சா வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 72 வாகனங்கள் மற்றும் தேனி மாவட்டத்தில் கைப்பற்றப்பட்ட 157 வாகனங்கள் சுடைமையாக்கப்பட்டு பொது ஏலத்தில் விடப்பட்டு அதற்குண்டான தொகை அரசு கணக்கில் செலுத்தப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் 24 வழக்குகளில் கைப்பற்றப்பட்ட 3,476 கிலோ குட்கா உரிய அனுமதி பெற்று அரசு வழிகாட்டு விதிமுறைகளின்படி பாதுகாப்பான முறையில் அழிக்கப்படுகிறது. இதுவரை 2026 ஆண்டில் மட்டும் திண்டுக்கல் மாவட்டத்தில் 353 வழக்குகளில் 7,900 கிலோ கிராம் குட்காவும் தேனி மாவட்டத்தில் 361 வழக்குகளில் 10,718 கிலோ குட்காவும் அழிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் விற்பனைக்கு எதிராக காவல்துறை தொடர்ந்து கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. போதைப் பொருட்கள் சமூகத்தில் ஏற்படுத்தும் தீமைகளை முற்றிலும் தடுக்கும் நோக்கில், இவ்வாறான பறிமுதல் மற்றும் அழிப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என்றும், போதைப் பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது.