• Fri. Sep 11th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

நீண்ட நாள் கோரிக்கை…நிறைவேற்றி கொடுத்த தாய்மை அறக்கட்டளை…

BySeenu

Aug 12, 2026

நீண்ட நாளாக தாய்மை அறக்கட்டளையிடம் கடிதம் வாயிலாகவும்,கைபேசி வாயிலாகவும் இருகூர் ஆரம்ப சுகாதார நிலையத்தின் தலைமை செவிலியர் மற்றும் மருத்துவர்கள் நோயாளிகள் சிகிச்சை பெறவும், காத்திருக்கவும் போதுமான வசதிகள் இல்லாமல் இருப்பதாகவும்… அதற்கு உதவவும் கேட்டிருந்தார்கள்..

ஒரு அரசு மருத்துவமனைக்கு அத்தியாவசிய தேவையான பொருட்களை வழங்குவது என்பது…..
வெறும் நன்கொடை மட்டும் அல்ல…
அங்கே சிகிச்சைக்காக வரும் ஒரு நோயாளியின் உணர்வுகளை மதிப்பது.., அவர்களின் வலியை சற்றே குறைப்பது,
சகமனிதனுக்கு சிறிது வசதியை ஏற்படுத்துவது,
நோய் தீவிரத்தில் காத்திருப்பில் இருக்கும் நோயாளிக்கு “நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்” என்று ஆறுதல் வழங்குவது போன்றது…

அதுவே உண்மையான மனிதநேயச் சேவை…
🙏🏻

அந்த எண்ணத்துடன், தாய்மை அறக்கட்டளை, கோயம்புத்தூர் இருகூர் கிராம அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு, நோயாளிகள், சிகிச்சை செய்யும் செவிலியர்கள், மருத்துவர்கள் மற்றும் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக…ரூ 52,200 மதிப்பீலான

🛏️ 2 மருத்துவக் கட்டில்கள்
🪑 25 பிளாஸ்டிக் நாற்காலிகள்

ஆகியவற்றை 10.08.2026 திங்கட்கிழமை அன்று அன்புடன் வழங்கியது.

இந்த நிகழ்வு…

👨‍⚕️ மருத்துவர் உமர் பாரூக், MD (BMO) (அரசு ஆரம்ப சுகாதார நிலையம்)
🤝 திரு. ஆத்மா சரவணன் (சமூக சேவகர்)
📜 திரு. ஞானபிரகாசம்( திருவள்ளுவர் பேரவை)
🌿 திரு. ஈஸ்வரமூர்த்தி – ஆலோசகர்( தாய்மை அறக்கட்டளை)

ஆகியோரின் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது.

இந்த சேவை முயற்சியை தாய்மை அறக்கட்டளையின் அறங்காவலர்கள்

🌿 திரு. கோவை சதீஸ்
🌿 திருமதி சாரதா
🌿 திருமதி மகேஸ்வரி

ஆகியோர் முன்னெடுத்தனர்.

மேலும், இந்த முயற்சிக்கு தங்களது நேரத்தையும் ஆதரவையும் வழங்கிய கார்த்திக், முத்துக்குமார், ஆண்டனி, பூமிகா, மயில்சாமி VR, சுகாதார நிலைய மருத்துவர்கள்,செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவருக்கும் எங்களது இதயம் கனிந்த நன்றிகள்.

இதுதான் எங்களின் பார்வையில் மனிதநேயம்.

இந்தச் சிறிய உதவிகளுக்குப் பின்னால் இருக்கும் அன்பும் அக்கறையும்,
நிச்சயம் மிகப் பெரிய அர்த்தம் கொண்டவை. ❤️

தேவை இருக்கும் இடமெல்லாம்…
தாய்மையுடன் சேவை செய்வோம்.
முடிந்தவரை துணை நிற்போம்.
மனிதநேயத்தை விதைப்போம். 🌿

❤️ “தாய்மை அறக்கட்டளை சேவை இதயத்தில் இருந்து..!”

🙏 சேவை தொடரும்…🙏