• Wed. Apr 24th, 2024

கீழடியில் இரும்புக்கத்தி, செப்பு தொங்கட்டான் கண்டுபிடிப்பு

ByA.Tamilselvan

Sep 23, 2022

கீழடி அகழாய்வில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக்காய், சேதமடைந்த இரும்புக் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கண்டறியப்பட்டது.
கீழடி, கொந்தகை, அகரம் ஆகிய இடங்களில் தமிழக தொல்லியல் துறை சார்பில் பிப்.12-ஆம் தேதி முதல் எட்டாம் கட்ட அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அணிகலன், கண்ணாடி மணிகள் உள்ளிட்ட பொருட்கள் கண்டெடுக்கப் பட்டன. இந்த நிலையில், 203 செ.மீ முதல் 215 செ.மீ வரையிலான ஆழத்தில் தந்தத்தால் ஆன விளையாட்டுப் பொருளான ஆட்டக் காய் கண்டறியப்பட்டுள்ளது. சேதமடைந்த துருப்பிடித்த நிலை யில் இரு துண்டுகளாக இரும்புக் கத்தி கண்டறியப்பட்டுள்ளது. 0.4 செமீ தடிமன் கொண்ட ஆண்டி மணியால் ஆன ஒப்பனைக்கருவி கண்டறியப்பட்டுள்ளது. 10.1 செமீ அளவிற்கு ஒரு பக்கத்தில் வளைந்துள் ளது, வளைந்த பகுதியைத் தவிர்த்து அது 12.6 செமீ நீளம் கொண்டதாக உள்ளது. 215 செ.மீ., ஆழத்தில் செவ்வக வடிவிலான செப்பு தொங்கட்டான், உள்ளிட்ட பண்டைய கால தமிழா்கள் பயன்படுத்திய பொருள்கள் கண்டெ டுக்கப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *