மதுரை மாநகர் காவல் எல்லைக்குட்பட்ட தெற்கு வாசல், தல்லாகுளம், திருப்பரங்குன்றம், அவனியாபுரம், திடீர் நகர், திலகர் திடல், செல்லூர் உள்ளிட்ட காவல் சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணாமல் போன செல்போன்களை உரிமையாளர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்வு மதுரை மாநகர் காவல் ஆணையர் அலுவலகத்தில் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் நடைபெற்றது.
இதில் 50 லட்சம் மதிப்பிலான காணாமல் போன 533 செல்போன்கள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டது, தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன்….கடந்த ஐந்து மதத்திற்குள் காணாமல் போன செல்போன்களை தனிப்படை அமைத்து 53 லட்சம் மதிப்புலான 533 செல்போன்கள் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது, கடந்த ஒன்றரை ஆண்டுகளில் மூன்றாவது முறையாக காணாமல் போன செல்போன்கள் மீட்டு உரிமையாளரும் ஒப்படைக்கப்பட்டு வருகிறது,
பெரும்பாலும் இரு சக்கர வாகனத்திலும் பேருந்திலும் செல்லும்போது கவனக்குறைவா தவறவிடும் செல்போன்களே அதிகமாக உள்ளது அவற்றை மீட்டு தற்போது உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது, மேலும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்பாளர்கள் உள்ளனர் அவர்கள் அனைத்து புகார்களுக்கும் சி எஸ் ஆர் கொடுக்கப்பட்டு , அதில் முகாந்திரம் இருக்கும் நிலையில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படும், அதேபோல புதன்கிழமை குறைதீர்க்கும் முகாம் நடைபெறுகிறது அதில் சம்பந்தப்பட்ட புகார் தாரர்களுக்கு உதவி ஆணையர்கள் மற்றும் துணை ஆணையர்கள் மூலம் ஒரு வார காலத்திற்குள் அந்த குறைகளை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது, மேலும் மதுரை மாநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வருகிறோம், பொதுமக்கள் போக்குவரத்தினால் பாதிப்பு இல்லாமல் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.