• Fri. Jan 24th, 2025

உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு

ByP.Thangapandi

Dec 19, 2024

உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உசிலம்பட்டி பகுதியில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா மற்றும் கூடுதல் ஆட்சியர் மோனிகா ராணா, பயிற்சி துணை ஆட்சியர் அனிதா உள்ளிட்டோர் முகாமிட்டு ஆய்வு செய்து வருகின்றனர்.

தனியார் மண்டபத்தில் உசிலம்பட்டி, செல்லம்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட அரசு அலுவலர்களுடன் ஆலோசனை மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகள் குறித்த ஆய்வு கூட்டம், உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் மனுக்கள் பெறும் முகாம் நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது உசிலம்பட்டி நகர்மன்ற தலைவர் சகுந்தலா தலைமையில் நகர் மன்ற உறுப்பினர்கள் உசிலம்பட்டி பேருந்து நிலைய பணிகளை விரைந்து முடித்து கொடுக்க உதவிடுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.

பேருந்து நிலைய விரிவாக்கத்திற்காக ஊராட்சி ஒன்றிய இடத்தை கையகப்படுத்துவது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் வழக்கு முடிந்ததும் விரைவில் பணிகளை முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ், மதுரை மாவட்ட ஆட்சியர் இன்று உசிலம்பட்டியில் இரவு பொதுமக்களோடு தங்கி குறைகளை கேட்டறிவார் என கூறப்படுகிறது.